படம் : மணப்பந்தல் (1962)
பாடல் வரிகள் :கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : P.சுசிலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே................(2)
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே.
ஓ..............................................................................................
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
=================================================================
Ennai maranthathen - பாடல்: என்னை மறந்ததேன் தென்றலே?
Movie: Kalangarai vilakkam - திரைப்படம்: கலங்கரை விளக்கம்
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1965
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ? ஒன்றும்
அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத் திறவாமல் எங்கே சென்றாயோ?
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ? இந்த
நிலமாளும் மன்னன் நீயான போதும் நாளாளும் சொந்தம் இல்லையோ?
கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போகும் நெஞ்சம் நெஞ்சம் மலராக மாறாதோ?
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
தொடராமல் தொடரும் சுவையான உறவில் வளராமல் வளார்ந்து நின்றாயே - இன்று
முடியாமல் முடியும் பனிபோன்ற கனவில் எனை வாழ வைத்துச் சென்றாயே
வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ?
எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ?
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்
========================================================================================
திரைப் படம்: நாணல் (1965)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வி.குமார்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு
பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
No comments:
Post a Comment